பாடலாசிரியர்    :   பாரதிதாசன்
பாடகர்கள்         :   சி எஸ் ஜெயராமன்

இசை                    பல்லவி

தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி 
தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி 
குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்கு பின்னாலே
குதம்பாய் காசுக்கு பின்னாலே

காட்சி ஆன பணம் கை விட்டு போன பின்
சாட்சி கோர்ட் ஏறாதடி...
காட்சி ஆன பணம் கை விட்டு போன பின்
சாட்சி கோர்ட் ஏறாதடி
குதம்பாய் சாட்சி கோர்ட் ஏறாதடி
பை பையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய்ச் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி
குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி

இசை                    சரணம் - 1

நல்லவர் ஆனாலும்...
ம்... ம்... ம்... ம்... ம்... 
நல்லவர் ஆனாலும்
இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவர் ஆனாலும்
இல்லாதவரை நாடு மதிக்காது
குதம்பாய் நாடு மதிக்காது
கல்வி இல்லாத மூடரை
கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணம் அடியே
குதம்பாய் வெள்ளிப் பணம் அடியே

சரணம் - 2

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே ( இசை )

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே 
உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே...
ஏ... ஏ... ஏ... ஏ... 
உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே
உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே

சரணம் - 3

முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே
சில முட்டாப் பயலை எல்லாம்
தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பிணத்தைக் கட்டி அழும் போதும்
தாண்டவக்கோனே... ஏ... ஏ... ஏ... ஏ... 

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா
தாண்டவக்கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா
தாண்டவக்கோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே ( இசை )


Uploaded By: S Girija
nadigarthilagamsivaji.com