பாடலாசிரியர்    :   உடுமலை நாராயணகவி
பாடகர்கள்         :   சி எஸ் ஜெயராமன்

இசை                    பல்லவி

கா... கா... கா... ( இசை ) 
கா... கா... கா... 

ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக 
அன்போடு ஓடி வாங்க
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக 
அன்போடு ஓடி வாங்க
என்ற அனுபவப் பொருள் விளங்க 
அந்த அனுபவப் பொருள் விளங்க 
காக்கை அண்ணாவே நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க ( இசை )

காக்கை அண்ணாவே நீங்கள்
அழகான வாயால் பண்ணாக பாடுவீங்க 
கா கா வென ஒண்ணாக கூடுவீங்க

வாங்க கா... கா... கா... 

இசை                    சரணம் - 1

சாப்பாடில்லாம தவிககுதுங்க 
தெனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாம தவிக்குதுங்க 
தெனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாள போடுறாங்க பாருங்க
உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால் தாப்பாள போடுறாங்க பாருங்க
அந்த சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க

ராகம் கா... கா... கா... 

இசை                    சரணம் - 2

எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைகாரர் சண்டை ரோட்டிலே
பிச்சைகாரர் சண்டை ரோட்டிலே... ஏ...

எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைகாரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன்
இனச் சண்டை பணச் சண்டை
இளைத்தவன் வலுத்தவன்
இனச் சண்டை பணச் சண்டை
எத்தனையோ இந்த நாட்டிலே
எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி சாதி நீங்க
எங்க பகுத்தறிவாளர பாக்காதிங்க
பட்சி சாதி நீங்க
எங்க பகுத்தறிவாளர பாக்காதிங்க
பச்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க 
பழக்கத்த மாத்தாதீங்க

எங்க பாடுங்க கா... கா... கா... ( இசை )


Uploaded By: S Girija
nadigarthilagamsivaji.com