பல்லவி
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
இசை சரணம் - 1
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
( இசை )
துஞ்சுது முகத்தில் என்பார்
மிக துயர் படுவார் எண்ணி பயப்படுவார்
அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
தொகையறா
கஞ்சி குடிப்பதற்க்கிலார்...
அதன் காரணங்கள் இவை எனும்
அறிவும் இலார்...
பஞ்சமோ பஞ்சமென்றே...
நிதம் பரிதவித்து... உயிர் துடி துடித்து...
சரணம் - 2
கஞ்சி குடிப்பதற்க்கிலார்
கஞ்சி குடிப்பதற்க்கிலார்
அதன் காரணங்கள் இவை என்னும்
அறிவும் இல்லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து உயிர் துடி துடித்து
துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியுமில்லை
அந்தோ நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே...
Uploaded By: S Girija
nadigarthilagamsivaji.com
|